தமிழகத்தில் 3 அமைச்சர்கள் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

மாதிரிப்படம்
- News18
- Last Updated: July 10, 2020, 2:10 PM IST
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் 2 அமைச்சர்கள் சேர்த்து மொத்தம் 10 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அமைச்சருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே, அவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுவரை, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பரமக்குடி தொகுதி சதன் பிரபாகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பழனி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, கோவை தெற்கு தொகுதி அம்மன் அர்ச்சுனன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமைச்சர்களில் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஆகியோர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
படிக்க: கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை
படிக்க: காற்றின் மூலம் கொரோனா தொற்று: அதிகம் பரவுவது எப்போது? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்.. பீதியில் மக்கள்..
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ரிஷிவந்தியம் தொகுதி வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி ஆர்.டி. அரசு, செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் கொரோனா பாதித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.