தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - காரணத்தைத் தேடும் அதிகாரிகள்

தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - காரணத்தைத் தேடும் அதிகாரிகள்

கொரோனா

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்று மத்திய அரசு கவலைத் தெரிவிக்கிறது.

  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,64,511-ஐ கடந்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையின் மொத்த பாதிப்பில் 1.48 சதவீதமாகும். மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 86.37 சதவீதம் பேர் 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 430 - 450 பேராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 480 என்ற அளவில் உள்ளது. கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்று அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

கடந்த 27-ம் தேதி வெளியான அறிவிப்பின்படி,  16,752 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,623 பேருக்கும், கேரளாவில் 3,792 பேருக்கும், பஞ்சாப்பில் 593 பேருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுடன், அமைச்சரவை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவரமாக பின்பற்றும்படி அவர் ஆலோசனை கூறினார். தொற்று அதிகரிப்புக்கான காரணத்தை கண்டறிய, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுக்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி திட்டம் மூலம், மொத்தம் 1,43,01,266 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இரண்டாவது கட்ட கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இதர உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போடுவதை அதிகரிக்க, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 10,000 தனியார் மருத்துவமனைகளும், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் பயன்படுத்தப்படவுள்ளன. இதர தனியார் மருத்துமனைகள், மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட்-19 தடுப்பூசி மையங்களாக செயல்படவுள்ளன.

மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளை, கொவிட்-19 தடுப்பூசி மையங்களாக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த மருத்துவமனைகளின் பட்டியலை
https://www.mohfw.gov.in/pdf/CGHSEmphospitals.xlsx என்ற இணைப்பில் பார்க்கலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ள உள்ள மருத்துவமனைகளை கண்டறிய கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்தலாம்.

https://www.mohfw.gov.in/pdf/PMJAYPRIVATEHOSPITALSCONSOLIDATED.xlsx.

இதுவரை, மொத்தம் 1.07 கோடி பேர் 1,07,75,169) இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 11,718 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கடந்த 27-ம் தேதி அறிவிப்பின்படி கொரோனா பாதிப்பால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: