அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு!

37மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு!
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தயாராகும் கல்வி நிறுவனம்!
  • Share this:
அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனோ நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனோ நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்புள்ள நபர்களை தனிமைப்படுத்த அரசு  முடிவு எடுத்துள்ளது.

அவ்வாறு தனிமைபடுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில்  உள்ள 2574 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளை  கொரோனா நோய்த்தொற்று மையங்களாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது.


அதன்படி 37மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டுள்ளனர். அதன்படி பள்ளிகளின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளித்து வருகின்றனர். விரைவில் அரசு பள்ளிகளின் வகுப்பறைகள் தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading