தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66

Tamilnadu Corona Update | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 66
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 7:49 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5556 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6 ஆயிரத்தை நெருங்கியே வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்தப் போதிலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 5,569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது.



மேலும் கொரோனாவிலிருந்து 5,556 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவிலிருந்து 4,81,273 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.



கொரேனா உயிரிழப்பு இன்று 66 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 8,751 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 987 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading