• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 60

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 60

கோப்புப் படம்

கோப்புப் படம்

Tamilnadu Corona Update | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. 

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6 ஆயிரத்தை நெருங்கியே வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்தப் போதிலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 5,516 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,41,993 ஆக உயர்ந்துள்ளது. 

    மேலும் கொரோனாவிலிருந்து 5206 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவிலிருந்து 4,86,479 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


    கொரேனா உயிரிழப்பு இன்று 60 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 8,811 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 996 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: