தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஒருவர் வெளிநாட்டு நபருடன் தொடர்பில் இருந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.


வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 90,543 பேராக உள்ளனர். 1681 பேர் எங்களது கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை 4, 248 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் 3,356 ரத்த மாதிரிகள் நெகட்டிவ் என வந்துள்ளது. இன்னும் 407 ரத்த மாதிரிகளின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.” என்றார்.

இன்று ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு இருவர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் இந்தக் கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading