தமிழகத்தில் புதிய உச்சமாக 16,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிய உச்சமாக 16,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிவருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000-த்துக்கும் கூடுதலாக இருந்தது. இந்தநிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,30,042 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 16,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 11,30,167 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குணமடைந்து 15,114 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரையில், 10,06,033 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று 98 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 13,826 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 4,764 பேருக்கும், செங்கல்பட்டில் 1,219 பேருக்கும், கோயம்புத்தூரில் 963 பேருக்கும், திருநெல்வேலியில் 714 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: