தமிழகத்தில் 34,000-த்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 303 பேர் உயிரிழப்பு

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,905 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 303 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது, தமிழகத்தில் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

  இந்தநிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,57,977 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 33,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 15,65,035-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,905 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில், 13,39,887 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 303 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 17,359-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,640 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,124 பேருக்கும், செங்கல்பட்டில் 2,013 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,521 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,237 பேருக்கும், திருச்சியில் 1,263 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: