• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட 13 முன்னணி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். 

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில், கொரோனா காரணமாக பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர முன்வந்துள்ள நிறுவனங்களின், முதலீடுகளை ஈர்ப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்திலும் 15ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு அழைப்பு அறிக்கை


    ஆப்பிள், சாம்சங், அமேசான், எச்.பி., உள்ளிட்ட 13 மின்னணுவியல் நிறுவனங்களின் தலைவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கடிதம் எழுதியுள்ளதாகவும் தமிழகத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள சாதகமான அம்சங்கள், தொழில் சூழலை அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய முதலீடுகளுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை வழங்கும் என கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also see...

    20,000-ஐக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை, குணமடைந்த 11,313 பேர் - தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு அப்டேட்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: