முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா அச்சம்: மார்ச் 31-ம் தேதிவரை மூடப்படுகிறது தாஜ்மஹால்!

கொரோனா அச்சம்: மார்ச் 31-ம் தேதிவரை மூடப்படுகிறது தாஜ்மஹால்!

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

உலகின் மிக முக்கிய சுற்றுலா இடமும் உலக அதிசயங்களில் ஒன்றான இடமான தாஜ்மகால் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் உலகின் மிக முக்கிய சுற்றுலா தளமான தாஜ்மகால் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில்  உலகின் மிக முக்கிய சுற்றுலா இடமும் உலக அதிசயங்களில் ஒன்றான இடமான தாஜ்மகால் வரும் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு பார்வையாளர்கள்  வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... 

First published:

Tags: CoronaVirus, Tajmahal