மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 6ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 22ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எஞ்சிய 3 கட்டங்களுக்கான தேர்தல் பரப்புரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் தினத்தில் இருந்து 72 மணி நேரத்துக்கு முன்பே பரப்புரைகளை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் தாம் பங்கேற்க இருந்த அனைத்து பரப்புரைகளையும் ரத்து செய்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய சூழலில் மிகப்பெரிய அரசியல் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டுமா என்பதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், புர்பா பர்தாமன் பகுதியில் நடைபெற்ற பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 122 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றும், மம்தா பானர்ஜி வெளியேற வேண்டிய நாள் நெருங்கிவிட்டது எனவும் விமர்சித்தார். ஐந்து கட்ட
தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மம்தா மனச்சோர்வு அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து நாடியாவில் நடைபெற்ற வாகன பிரசாரத்தில் அமித்ஷா கலந்து கொண்டார்.
இதற்கிடையே, கொல்கத்தாவின் தகூரியா பாலத்தில் இருந்து, கலிகாட் வரை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் சென்று பரப்புரை மேற்கொண்டார்.
மேலும் படிக்க...
பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
பின்னர் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய அவர், நாடு முழுவதும்
ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து இல்லை என்றும், ஆனால் 80 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். உள்நாட்டு தேவை போக, அதன்பின் வெளிநாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் தவறில்லை என்றும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
குறிப்பிட்டார்.