வாரத்தில் 3 நாட்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள்: கணக்கெடுப்பில் தகவல்!

உலகளவில் ஏற்பட்டுள்ள வேலை நடைமுறை குறித்த மாறுபட்ட விருப்பங்களின் முன்னுதாரத்தை கணக்கெடுப்பு சித்தரிக்கிறது.

உலகளவில் ஏற்பட்டுள்ள வேலை நடைமுறை குறித்த மாறுபட்ட விருப்பங்களின் முன்னுதாரத்தை கணக்கெடுப்பு சித்தரிக்கிறது.

  • Share this:
உலக பொருளாதார மன்றத்துடன் (World Economic Forum) இணைந்து Ipsos நடத்திய புதிய கணக்கெடுப்பில், சுமார் 29 நாடுகளை சேர்ந்த 23 சதவிகிதம் ஊழியர்கள், கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இப்போது அடிக்கடி வீட்டிலிருந்து வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோயால் மாறிய வேலை நடைமுறைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பு மே 21 முதல் ஜூன் 4 வரை ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 12,500 பங்கேற்பாளர்கள் பணிபுரிபவர்களாக இருந்தனர். அதில், 66 சதவிகித ஊழியர்கள், கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் முதலாளிகள் அலுவலக வருகைக்கு மிகவும் நெகிழ்வாக இருப்பார்கள் என நம்புவதாக ஆய்வின் கண்டுபிடிப்புகள் கூறியுள்ளன.

ஏறக்குறைய 65 சதவிகித ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நெகிழ்வான அட்டவணைகளுடன் தங்களை அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்கள் என்று நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை விரும்புகின்றனர். மேலும் 64 சதவிகிதம் ஊழியர்கள் தொற்றுநோய்க்குப் பிறகு அலுவலகத்தில் சென்று வேலை நேரங்களை செலவிட வேண்டும் என்று நினைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து இப்சோஸின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மேற்கண்ட கருத்துக்கள் பெரும்பாலும் அதிக கல்வி மற்றும் வருமானம் உள்ளவர்கள், பெண்கள், இளையவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடையே அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆய்வில் கலந்துகொண்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் அதாவது 38% பேர் வேலை செய்ய கடினமான இடம் தங்கள் வீடு தான் என்று கூறியுள்ளனர். இதுதவிர 37% பேர் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, தங்கள் வேலையில் இருந்து விலகியிருப்பதாக உணர்கிறார்கள். மேலும் 33% பேர் வீட்டில் இருந்து வேலை செய்வதால் சில சமயங்களில் எரிச்சல் அடைந்ததாக கூறியுள்ளனர்.

Must Read | வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு விரைவில் ‘குட்பை’… கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய இ-மெயில்

மேலும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, "பத்தில் மூன்று பேர், அதாவது மொத்த பங்கேற்பாளர்களில் 30%-பேர் முழு நேரமும் வீட்டில் இருந்து வேலை செய்வதை தவிர்க்க நினைப்பதால், அதே சம்பளம் மற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்ட வேறொரு வேலையைத் தேடுவதைக் கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளனர். 35 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவ்வாறு கூற வாய்ப்புள்ளது, ”என்று Ipsos வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு உலகளவில் ஏற்பட்டுள்ள வேலை நடைமுறை குறித்த மாறுபட்ட விருப்பங்களின் முன்னுதாரத்தை சித்தரிக்கிறது. தொற்றுநோய்க்குப் பிறகு, ஐந்து நாள் வேலை வாரத்தில் இந்திய தொழிலாளர்கள் WFH செய்ய விரும்பும் சராசரி நாட்களின் எண்ணிக்கை 3.4 ஆக உள்ளது. சீனா, பெல்ஜியம் மற்றும் பிரான்சில் உள்ள ஊழியர்கள் ஐந்து நாள் வேலை வாரத்தில் 1.9 நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்புவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷ்யா, ஜப்பான், போலந்து, ஹங்கேரி, சீனா மற்றும் தென் கொரியாவில் உள்ள ஊழியர்களில் பத்தில் ஒருவரை ஒப்பிடுகையில், பெரு, சிங்கப்பூர், இந்தியா, அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்களில் பத்தில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒர்க் பிரம் ஹோமில் அடிக்கடி வேலை செய்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Archana R
First published: