ரேபிட் கிட் பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக சீனாவைச் சேர்ந்த வோண்ட்ஃபோ நிறுவனம் கூறியுள்ளது.
சீனா நிறுவனங்களான guangzhou wondfo biotech மற்றும் zhuhai livzon diagnostics ஆகிய நிறுவனங்களிடம் சுமார் 5 லட்சம் கிட்களை மத்திய அரசு ஆர்டர் செய்தது. துரிதமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் வித்தியாசம் இருந்ததால், ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என ஐசிஎம்ஆர் அறிவித்தது.
பழைய முறையான பிசிஆர் பரிசோதனையை தொடரலாம் என்றும், வாங்கிய ரேபிட் கிட்களை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், ஐசிஎம்ஆரின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக சீன நிறுவனமான வோண்ட்ஃபோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நியூஸ் 18 குழுமத்திற்கு பிரத்யேகமாக விளக்கமளித்த வோண்ட்ஃபோ நிறுவனம், தங்கள் கருவிகளின் தரம் சிறப்பாக இருந்ததாகவும், சூழலுக்கு ஏற்ப அதன் முடிவுகளில் மாற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், பரிசோதனை நடத்தப்பட்ட காலம் மற்றும் கருவிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெப்பநிலையில் மாற்றங்கள் இருந்தால் முடிவுகளில் மாற்றங்கள் இருக்கும் என ஏற்கெனவே தெரிவித்ததாகவும் வோண்ட்ஃபோ கூறியுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஐ.சி.எம்.ஆர். நிராகரித்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் வோண்ட்போ தெரிவித்துள்ளது.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.