ஊரடங்கு நேரத்திலும் கிரிக்கெட்: சிறுவர்களுடன் ரெய்னா குதூகலம்..! - வீடியோ

பிரதமர் பொது நிவாரணத்திற்கு 31 லட்சம் ரூபாயும், உத்தரப்பிரதேச முதல்வர் பொது நிவாரணத்திற்கு 21 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.

ஊரடங்கு நேரத்திலும் கிரிக்கெட்: சிறுவர்களுடன் ரெய்னா குதூகலம்..! - வீடியோ
சுரேஷ் ரெய்னா
  • Share this:
சுரேஷ் ரெய்னா வீட்டிற்குள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும் ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனிடையே ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீட்டில் ஓய்வில் இருக்கும் அனுபவத்தை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவிட்டு வருகின்றனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரெய்னா சிறுவர்களுடன் வீட்டில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் வீடியோவை சி.எஸ்.கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கொரோனா பரவுதலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரெய்னா தன்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளார். பிரதமர் பொது நிவாரணத்திற்கு 31 லட்சம் ரூபாயும், உத்தரப்பிரதேச முதல்வர் பொது நிவாரணத்திற்கு 21 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading