Home /News /coronavirus-latest-news /

உச்சநீதிமன்ற பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி...!

உச்சநீதிமன்ற பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி...!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து நீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளும் காணெலி காட்சி மூலமாகதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்ற வளாகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் ஊழியர் ஒருவருக்கு திங்களன்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனை மூலமாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர் மருத்துவப் பணியாளர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கடந்த 16ம் தேதி கண்டறியப்பட்டதை அடுத்து அவருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் காணும் பணி தற்போது துவங்கியுள்ளது.

    பாதிக்கப்பட்டவருடன் இரு பதிவாளர்கள் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் வரும் 30ம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவே உச்சநீதிமன்றத்தின் முதல் கொரொனா பாதிப்பு ஆகும். ஏன்னென்றால் மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து நீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளும் காணெலி காட்சி மூலமாகதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Supreme court

    அடுத்த செய்தி