வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தற்போதைக்கு அங்கேயே இருப்பதே சரி...! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தலைமை நீதிபதி போப்டே

"இந்தியாவில் உள்ள வெளிநாட்டவரின் விசா காலமும், ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது"

 • Share this:
  வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தற்போதைக்கு அங்கேயே இருப்பது தான் சரியானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

  அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவேண்டி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தற்போதைய சூழ்நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அங்கேயே இருப்பது தான் சரியானதாக இருக்கும் என்று கூறினார்.

  இந்தியர்களின் விசா காலத்தை, வெளிநாடுகள் நீட்டித்துள்ளதால் தற்போதைக்கு சிக்கல் இல்லை என்று கூறிய போப்டே, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். இதனிடையே இந்தியாவில் உள்ள வெளிநாட்டவரின் விசா காலமும், ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: