'சாமான்ய மனிதனின் தீபாவளி உங்கள் கைகளில் உள்ளது' - வங்கி கடன் தவணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற முடிவு எடுத்த பிறகு, அதை நடைமுறைப்படுத்த தாமதம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு தாமதம் செய்வது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

'சாமான்ய மனிதனின் தீபாவளி உங்கள் கைகளில் உள்ளது' - வங்கி கடன் தவணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..
உச்ச நீதிமன்றம் (கோப்புப்படம்)
  • Share this:
வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாக கூறி, அதை ரத்து செய்யக்கோரி கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதற்கிடையே 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளவர்களுக்கு மட்டும் மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

மேலும் படிக்க: யானை மீது உட்கார்ந்தபடி யோகா செய்த பாபா ராம்தேவ்.. நிலைதவறி கீழே விழுந்ததால் பரபரப்பு (வீடியோ)


மேலும் கடன் தவணை உரிமை காலத்தை 6 மாதங்களுக்கு மேல் நீட்டித்தால் கடனை திருப்பி செலுத்தும் போக்கில் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் வங்கி கடன்களை உரிய நேரத்தில் செலுத்துவது சீர்குலையும் என இந்திய ரிசர்வ் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரூ.2 கோடி வரை வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்று முடிவு செய்தாகிவிட்டது. இந்த முடிவை எப்போது அமல்படுத்தப்போகிறீர்கள்? என கேட்டனர்.அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வங்கிகள் கூட்டமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல் ஹரீஷ் சால்வே ஆகியோர், ‘ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு மாதம் அவகாசம் வேண்டும்’ என்றனர்.இதற்கு நீதிபதிகள், ‘ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற முடிவு எடுத்த பிறகு, அதை நடைமுறைப்படுத்த தாமதம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு தாமதம் செய்வது பொதுமக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை. வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டம் செயல்படுத்தப்படுமா? என சாதாரண மக்கள் அச்சத்தில் உள்ளனர்

சாதாரண மக்களின் நிலையை பாருங்கள். எனவே ரூ.2 கோடி வரை வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்ற திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக முடிவு எடுத்து நவம்பர் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், சாதாரண மக்கள் தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது’ என்று தெரிவித்தனர்.'
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading