• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரம் - அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரம் - அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்

கோப்புப்படம்

ரயில் மற்றும் பேருந்து பயணங்களுக்காக புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புலம்பெயர் தொழிலாளர்கள் படும் துயரம் குறித்து உச்சநீதிமன்றம், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணங்கள் மற்றும் உணவை யார் வழங்குவது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  தொழிலாளர்கள் பசியின்றி இருக்கிறார்களா என யாரேனும் கண்காணிக்கிறார்களா என்றும், தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்ப இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்றும் வினவினர்.

    இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தொழிலாளர்களுக்கான பயணக்கட்டணத்தை அவர்கள் புறப்படும் மாநில அரசோ அல்லது அவர்கள் சென்றடையும் மாநிலத்தின் அரசோ ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்குவதாகத் தெரிவித்தார்.

    விசாரணையின் போது நாடு முழுவதும் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப காத்து கொண்டிருப்பதாக மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார்.

    இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடைக்கால உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில்களிலோ, பேருந்திலோ எவ்விதமாக கட்டணமும் கண்டிப்பாக வசூலிக்கக்கூடாது என தெரிவித்தனர்.  தொழிலாளர்கள் ரயிலில் புறப்படும் வரை அவர்களுக்கான உணவை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினர். ரயிலில் புறப்படும் வரை மாநில அரசுகளும், ரயில் பயணத்தில் ரயில்வே நிர்வாகமும் தொழிலாளர்களுக்கு உணவும் குடிநீரும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சொந்த மாநிலத்துக்கு திரும்புவோர் தங்கள் கிராமங்களை சென்றடையும் வரையிலான போக்குவரத்து, மற்றும் உணவை அவர்களின் மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    உணவு தொடர்பாக உத்தரவு பேருந்து பயணங்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் உதவி மையங்களை ஏற்படுத்தி, அவர்கள் பதிவு செய்வதை மாநில அரசுகள் விரைவுபடத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் எந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார்களோ, அப்பகுதிக்கு அருகில் உள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  தேவையான ரயில்களை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், பயணத்திற்கான ரயில்கள் மற்றும் பேருந்துகள் குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எவ்வளவு தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: