போர் புரியும் தூதர்களை அடக்குவதா? மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு எதிராக பாயும் வழக்குகள்.. உச்சநீதிமன்றம் கண்டனம்..
உண்மை நிலையை ஊடகங்களிலோ சமூக ஊடகங்களிலோ பேசும் மருத்துவ சுகாதார பணியாளர்களின் மீது வழக்கு பதியும் மாநில அரசுகளின் போக்கை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

மாதிரிப் படம்
- News18 Tamil
- Last Updated: June 18, 2020, 9:19 AM IST
உண்மை நிலையை ஊடகங்களிலோ சமூக ஊடகங்களிலோ பேசும் மருத்துவ சுகாதார பணியாளர்களின் மீது வழக்கு பதியும் டெல்லி அரசின் போக்கை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
”தூதுவர்களாக இருக்கும் அவர்களை முடக்காதீர்கள். கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் மீதும் சுகாதார பணியாளர்களின் மீது வழக்குகளைப் பதிவதை நிறுத்துங்கள்” என டெல்லி அரசிடம், நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்துதல், மருத்துவர்களுக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப்பெறுதல், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் தரப்பட்டுவிட்டதற்கான சாட்சியம் ஆகியவை அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். டெல்லி, மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு, இத்தகைய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
”தூதுவர்களாக இருக்கும் அவர்களை முடக்காதீர்கள். கொரோனாவுக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்கும் மருத்துவர்களின் மீதும் சுகாதார பணியாளர்களின் மீது வழக்குகளைப் பதிவதை நிறுத்துங்கள்” என டெல்லி அரசிடம், நீதிபதி அஷோக் பூஷண் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
நீக்கப்பட்ட மருத்துவர்களை மீண்டும் பணியமர்த்துதல், மருத்துவர்களுக்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப்பெறுதல், சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் தரப்பட்டுவிட்டதற்கான சாட்சியம் ஆகியவை அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.