சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா திடீரென அதிகரிப்பு.. காரணம் என்ன? ஐஐடி இயக்குநர் விளக்கம்

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா திடீரென அதிகரிப்பு.. காரணம் என்ன?  ஐஐடி இயக்குநர் விளக்கம்

கோப்புப் படம்

சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்ததற்கு, மாணவர்கள் விதிகளை கடைபிடிக்காததே காரணம் என ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ஐஐடி வளாகத்தில் கடந்த 9ஆம் தேதி 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களுடன் தொடர்பிலிருந்த 444 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம், 87 மாணவர்கள் உட்பட 104 நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வளாகத்தினுள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தொற்று பரவல் அதிகரித்தது. இதனால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொற்று பாதித்த மாணவர்கள் சிகிச்சையில் நலமாக இருப்பதாகவும், மீதமுள்ள மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு போர்க்கால் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஐஐடி கொரோனா தொற்று நமக்கு ஒரு பாடம் எனவும் தமிழகத்தில் பரவல் குறைகையில், இப்படி குவியலாக தொற்று ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும் படிக்க...கட்சித் தொடங்குவதில் நடிகர் ரஜினிகாந்த் தீவிரம்.. காட்டமாக விமர்சிக்கும் அரசியல் பிரமுகர்கள்

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி,  பாதுகாப்பு விதிகளை மாணவர்கள் சரியாக கடைபிடிக்காததே தொற்று பரவல் அதிகரிக்க காரணம் என கூறினார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: