ஆஸ்துமா நோயாளிகள் சரியான சிகிச்சை பெற்று வந்தால் கடுமையான கோவிட்-19 விளைவுகளில் இருந்து தப்பிக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து அலர்ஜி மற்றும் மருத்துவ நோய் எதிர்ப்பு இதழில் வெளியான தகவலின்படி, ஆஸ்துமா நோயாளிகள் குறிப்பாக மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்கள் கொரோனா தொற்று நோய் பாதிப்பிற்குள்ளானால் தங்கள் ஆஸ்துமா மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
ஆஸ்துமா நோயாளிகள் சரியான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை அவர்களது மருத்துவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான் ஆஸ்துமா நோய் கட்டுக்குள் இருக்கும் மற்றும் கோவிட்-19 பாதிப்பால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறையும் என தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உதவி பேராசிரியர் ஷாங்குவா சென் கூறியுள்ளார்.
Must Read | கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? விளக்கும் நிபுணர்கள்..!
மேலும் இதுகுறித்து விளக்கிய அவர், தெற்கு கலிபோர்னியாவில் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை 61,338 கோவிட்-19 நோயாளிகளின் தரவுகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், இந்த நோயாளிகளுக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதற்கு முன்னர் ஆஸ்துமா அல்லது நுரையீரல் நோய் உள்ளதா என்பதை அறிய மருத்துவக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த 12 மாதங்களுக்குள் ஆஸ்துமா, நுரையீரல் நோய் இருந்திருந்தால் அவர்களை ஆக்டிவ் (active) நோயாளிகள் என்றும், எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள் இன்ஆக்டிவ் (inactive) என்றும் ஆராய்ச்சியாளர்கள் தரவை பிரித்து ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வில் ஆஸ்துமா நோய் பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில், ஆஸ்துமா போன்ற பிற நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் கோவிட்-19 பாதித்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் தீவிர சுவாச பிரச்னை மற்றும் அதன் விளைவாக ஐசியு தேவைப்படும் நிலை உள்ளிட்ட அதிக சிரமங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. எனினும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இறப்புக்கான அதிக வாய்ப்பு கண்டறியப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வானது "கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் நல கோளாறுகளில் ஆஸ்துமாவின் தாக்கத்தை ஆராய்வதைத் தாண்டி, ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவர்களின் நோயின் கட்டுப்பாட்டின் அளவைப் பொறுத்து கோவிட்-19 முடிவுகள் எவ்வாறு மாறக்கூடும் என்பதில் கவனம் செலுத்தியது" என்று கைசர் பெர்மனென்ட் தெற்கு கலிபோர்னியா ஆராய்ச்சித் துறையை சேர்ந்த ஆனி எச் சியாங் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் இந்த ஆய்வின் மூலம் ஆஸ்துமா பாதிப்பு உள்ள நோயாளிகள் கூட தொடர்ந்து ஆஸ்துமா மருந்துகளைப் பயன்படுத்தி வந்தால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட அதன் விளைவுகள் அதிகம் ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆஸ்துமா நோயகளுக்கு அவர்களது மருந்துகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஆய்வு என சியான் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Asthma, Corona, Corona safety, Covid-19