Corona Vaccine | கொரோனா தடுப்பூசியால் உடலில் ஏற்படும் சில அறிகுறிகள்: இளைஞர்கள், முதியவர்களில் எவ்வாறு வேறுபடுகிறது?

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க போட்டுக் கொள்ளும் தடுப்பூசியில், உடலில் பெரிதான அளவுக்கு மாற்றங்கள் ஏற்படாது.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க போட்டுக் கொள்ளும் தடுப்பூசியில், உடலில் பெரிதான அளவுக்கு மாற்றங்கள் ஏற்படாது.

  • Share this:
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்கு, கொரோனா தடுப்பூசிகள் உதவுகின்றன. தடுப்பூசிகளால் பொதுவாக ஏற்படும் மிதமான பாதிப்புகள் கொரோனா தடுப்பூசியிலும் உள்ளன. ஆனால், இளைஞர்கள் மற்றும் முதியவர்களில் இதன் பாதிப்பு வெவ்வேறு விதமாக வெளிப்படுகின்றன.

கொரோனா தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க போட்டுக் கொள்ளும் தடுப்பூசியில், பெரிதாக கவலைப்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படாது. அது மட்டுமின்றி, தடுப்பூசி செலுத்திய பிறகு, ஒவ்வொருவரின் உடலும் தடுப்பூசிக்கு எவ்வாறு வெவ்வேறு விதமாக ரியாக்ட் செய்கிறது என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், மற்றொருவருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் போகலாம்.

ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் காணப்படுகிறது?

தடுப்பூசியினால்  உடலில் ஏற்படும் சில மாற்றங்கள், பொதுவாக அழற்சி எதிர்வினைகள் என்று அறியப்படுகின்றன. வயது, பாலினம் மற்றும் தடுப்பூசியின் வகை ஆகியவற்றினால் வேறுபடும். உதாரணமாக, கொஞ்சம் வயதானவர்களோடு ஒப்பிடும் போது, இளைஞர்கள், தீவிரமான பாதிப்புகளை உணர்வதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திய பின்பு உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் வயதைப் பொறுத்து மாறுபடும். 45 வயதுக்குட்பட்ட பெண்களால், அதிக அளவில் மாற்றங்கள் குறித்து புகார் அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். mRNA மற்றும் பாரம்பரிய தடுப்பூசிகளின் விளைவை ஆய்வு செய்த இங்கிலாந்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு முன்னணி பல்கலைக்கழகம், சமீபத்தில் நடத்திய மருத்துவ சோதனைகளின் அடிப்படையில், வெவ்வேறு வயதினரிடத்தில் அதிகமாக காணப்பட்ட வெவ்வேறு மாற்றங்கள் இங்கே...

கொரோனா தடுப்பூசியால் முதியவர்களுக்கு ஏற்படும் பொதுவான மாற்றங்கள்:

நமக்கு வயது ஏற ஏற, நம்முடைய நோய் எதிர்ப்பு மையத்தின் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. எனவே, இளம் வயதில் உங்களுக்காக போராடிய நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு, உங்களுக்கு வயதாகும் போது, திறன் குறைந்து விடும். எனவே, தடுப்பூசி செலுத்தப்படும்போது, நோயெதிர்ப்பு சக்தி செல்கள் உடனேயே அதனை எதிர்த்து செயல்பட முயற்சி செய்யும். எனவே, வயதானவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தி செல்கள் மெதுவாக செயல்படும். இதனால், உடலின் தடுப்பூசியால் ஏற்படும் விளைவும் மிகவும் மெதுவாகவே இருக்கும். இளைஞர்களோடு ஒப்பிடும் போது, வயதானவர்களுக்கு தடுப்பூசியின் பாதிப்பு குறைந்த அளவிலேயே இருக்கிறது.

65 வயது மற்றும் மேற்பட்டவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ சோதனைகள் அனைத்தும் இதையே தெரிவிக்கின்றன. தடுப்பூசி செலுத்திக்கொண்ட வயதானவர்களிடம் காணப்பட்ட பாதிப்புகளில், ஊசி செலுத்திய இடத்தில் வலி, சிவந்து போதல், வீக்கம், உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவை அடங்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த விதமான தடுப்பூசி செலுத்தினாலும் ஏற்படும் பாதிப்பான காய்ச்சல் பெரிதாக காணப்படவில்லை. அதுமட்டுமின்றி, mRNA தடுப்பூசிகளான, Pfizer மற்றும் Moderna-வின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்களிடையே, ஊசிக்குப் பின்பான அறிகுறிகளாக இவையே காணப்பட்டன.

இளைஞர்களிடையே வேறுபடும் கொரோனா தடுப்பூசியின்  மாற்றங்கள்:

நம்முடைய இளம் வயதில், நோய் எதிர்ப்பு சக்தி உச்சத்தில் இருக்கும். அதுமட்டுமின்றி, அதுவே நம்மை இளைஞர்களாக ஆக்குகிறது. அதாவது, 50 வயதுக்கும் குறைவானவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். எனவே, உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், ‘ஆரோக்கியம்’ மற்றும் முதன்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மையமும், அதிகமாக தாக்கமுள்ள மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனாலேயே இளைஞர்களின் உடல்நலமானது சோர்ந்து, ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளைஞர்கள் உடற்சோர்வு, குறைந்தது முதல் மிதமான காய்ச்சல், சளி, மூட்டு வலி, முதுகுவலி போன்ற கடுமையான மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது. குமட்டல், வயிற்று வலி, தசைப்பிடிப்புகள் மற்றும் மாதவிடாய் சுழற்சியில் தற்காலிக மாற்றங்கள் உள்ளிட்ட தடுப்பூசிக்குப் பிந்தைய 'அசாதாரண' அறிகுறிகளாக, சில பாதிப்புகளை, இளம்பெண்கள் சிலர் எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள், வேகமான இதயத் துடிப்பு, பலவீனம், புண் போன்றவை தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளையவர்களில் பொதுவாகக் காணப்படும் மாற்றங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். இருப்பினும், மேலே இருப்பவற்றை குறிப்பிட்டுள்ளதால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைவருக்கும் அனைத்து மாற்றங்களும் ஏற்படாது. தடுப்பூசியால் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமலும் போகலாம். அல்லது மிகக்குறைவான அளவில், நீங்கள் கவனிக்க வேண்டிய அளவில் அதனை நீங்கள் எளிதில் கையாளலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தொற்று ஏற்படாமல் இருக்க, நீங்கள் அனைத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடைமுறைகளையும் பின்பற்றும் வரை, தடுப்பூசி அதன் வேலையைச் சிறப்பாகச் செய்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வாமை உள்ளவர்கள் என்ன விதமான மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள்?

ஒவ்வாமை எதிர்வினைகள், அல்லது தடுப்பூசிக்குப் பிந்தைய அனாஃபிலாக்ஸிஸ் என்பவை எல்லாம் மிகவும் அரிதான நிகழ்வு. ஆயினும்கூட, ஒவ்வாமை எதிர்வினைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவ வரலாற்றைக் கொண்ட ஒரு நபர், அல்லது கொரோனா தடுப்பூசியில் உள்ள எந்தவொரு பொருட்களுக்கும் சென்சிடிவ் ரியாக்ஷன் உள்ள நபர், பாதகமான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும், எனவே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, தேவைப்படும்போது உதவி பெற வேண்டும்.

ஆய்வை வழிநடத்தும் நிபுணர்களின் கூற்றுப்படி, எதிர்விளைவால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களிடத்தில் மயக்கம், சீரற்ற இதயத்துடிப்பு, அதிக வியர்வை, சருமத்தில் சில மாற்றங்கள் ஆகிய அறிகுறிகளை, தடுப்பூசி செலுத்தியவுடன் சில நிமிடங்களிலேயே காணப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடுப்பூசி சம்மந்தப்பட்ட மாற்றங்கள் கடுமையாக இருந்தபோதிலும், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் அவற்றுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சையளிக்கப்படலாம் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். எனவே, உங்களுக்கு இதைப்போன்று ஆபத்து நேரும் பிரிவில் இருந்தாலும், நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறாதீர்கள். மேலும், மருத்துவரை சந்தித்து, சரியான ஆலோசனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.
Published by:Archana R
First published: