COVID-19 | நீங்கள் ஒரு காஃபி பிரியரா? உங்களுக்கு ஓர் ஆச்சர்யமான செய்தி இங்கே!

இங்கிலாந்து பயோபாங்கில் 40,000 பிரிட்டிஷ் இளைஞர்களின் தரவுகளை ஆராய்ந்த பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பயோபாங்கில் 40,000 பிரிட்டிஷ் இளைஞர்களின் தரவுகளை ஆராய்ந்த பின்னர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
நீங்கள் ஒரு காஃபி பிரியராக இருந்தால், உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆச்சர்யமான செய்தி காத்திருக்கிறது. அது என்னவென்றால், ஒரு நாளைக்கு ஒரு கப் காஃபி குடிப்பதால் கொரோனா வைரஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடமேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், காஃபி உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் காஃபியை உட்கொள்பவர்கள் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "காஃபி குடிப்பது, சி.ஆர்.பி, இன்டர்லூகின் -6 (ஐ.எல் -6), மற்றும் டியூமர் நெக்ரோஸிஸ் காரணி I (டி.என்.எஃப்-ஐ) போன்ற அழற்சி பயோமார்க்ஸர்களுடன் சாதகமாக தொடர்புடையது. இவை கோவிட் -19 தீவிரம் மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை" என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, "காஃபி நுகர்வு வயதானவர்களிடையே நிமோனியாவின் குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது. இதனை ஒன்றாக எடுத்துக்கொண்டால், கோவிட் -19க்கு எதிரான காஃபியின் நோயெதிர்ப்பு எதிர்ப்பு விளைவு நம்பத்தகுந்ததாக இருக்கும்" என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆய்வுக்காக, இங்கிலாந்து பயோபாங்கில் 40,000 பிரிட்டிஷ் இளைஞர்களின் தரவுகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் காஃபி, எண்ணெய் மீன், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பச்சை காய்கறிகள், புதிய பழங்கள், சிவப்பு இறைச்சி போன்ற தினசரி உணவு காரணிகளுக்கும் கொரோனாவுக்கும் இடையிலான தொடர்பை ஆய்வு செய்தனர். அதில் குறைந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் அதிக காய்கறிகளை உட்கொள்வது கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்பதையும் காண முடிந்தது.

இதையும் படிங்க: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த சுவாச பயிற்சிகள் போதும்!

காய்கறிகளின் குறைந்தது 0.67 பரிமாணங்களை (உருளைக்கிழங்கு தவிர) உட்கொள்வது நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாவது, "ஊட்டச்சத்து காரணிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்துவமான அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருதுகோளை எங்கள் முடிவுகள் ஆதரிக்கின்றன. எனவே, கொரோனாவால் ஒருவர் எளிதில் பாதிப்படைவதை இது தடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, சில ஊட்டச்சத்து நடத்தைகளை பின்பற்றுவதை ஊக்குவிப்பது உதாரணத்திற்கு, காய்கறி உட்கொள்ளலை அதிகரிப்பதோடு பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளலைக் குறைப்பது, இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களில் தற்போதுள்ள கூடுதல் கருவியாக இருக்கலாம்" என்று தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்புகள் சுயாதீனமான உறுதிப்பாட்டைக் கோருகின்றன என்றாலும், இந்த வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த சில உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது ஏற்கனவே இருக்கும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு கூடுதல் கருவியாக இருக்கலாம் என்று அவர்கள் மேலும் கூறினர்.
Published by:Archana R
First published: