• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • COVID-19 | கொரோனா இறப்பு அபாயமும்… உயர் இரத்த அழுத்தமும்… என்ன தொடர்பு?

COVID-19 | கொரோனா இறப்பு அபாயமும்… உயர் இரத்த அழுத்தமும்… என்ன தொடர்பு?

இரத்த அழுத்தம் அதிகமாவதால் ஏற்படும் ஹைப்பர்டென்ஷன், கோவிட் தொற்றால் இறக்கும் அபாயத்தை அதிகப்படுத்துகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
ஹைப்பர்டென்ஷன் அல்லது உயர் ரத்த அழுத்தம் என்பது மிகவும் தீவிரமான உடல்நலக் கோளாறுகளில் ஒன்று. அது மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்படும் இறப்பில் முதன்மையான காரணமாக உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. உலகெங்கும் கோவிட் பெருந்தொற்று பரவி, ஓராண்டுக்கும் மேலான நிலையில், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டால், நோய்த்தொற்று தீவிரமாக காணப்படும் அல்லது கோவிட்-19 தொற்றால் இறக்கும் அபாயமும் அதிகமாகும்.

இந்தியாவில், வயதுவந்தவர்களில் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்தினர், ஹைப்பர்டென்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை அபாயகரமானது. மேலும், இதில் பலரும் தங்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதே தெரியாது. உலகம் முழுவதும். 10.4 மில்லியன் இறப்புக்கும், 21 மில்லியன் DALY (Disability adjusted life years) உடல்நலக் குறைபாட்டுக்கும் காரணம், ஹைப்பர்டென்ஷன்.

FPAI - இந்தியக் குடும்பக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள், உயர் இரத்த அழுத்தத்தை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுகிறார்கள். இது நடுத்தர வயதினரிடையே அதிகரித்து வருவதும் ஆபத்தானதாகக் காணப்படுகிறது என்று கவலையுடன் தெரிவித்தனர். அது மட்டுமின்றி, ஏற்கனவே உலகம் முழுவதையும் கட்டிப்போட்டிருக்கும் கோவிட்-19, உயர் ரத்தம் அழுத்தம் இருப்பவர்களை பாதித்தால், பாதிக்கப்பட்டவர்கள் இறக்க நேரிடும்.

“கோவிட் தொற்று பாதிப்பால், வழக்கமாக பலரும் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகள், ஹைப்பர்டென்ஷன் உட்பட, தவிர்த்து விட்டனர் அல்லது பின்னர் செய்து கொள்ளலாம் என்று போஸ்ட்போன் செய்துவிட்டனர். ஆனால், முரண்படும் நிலையாக, இயல்பான ரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படுவதை விட, உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கோவிட் தொற்று மிகவும் கடுமையாக இருக்கக்கூடும். மேலும், ஹைப்பர்டென்சிவ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்படும். கோவிட்-19 தொற்று சிகிச்சையும் பராமரிப்பும், ஹைப்பர் டென்ஷன் பாதிப்பு உள்ள நபர்களிடையே பெரும்பாலும் பலன் அளிப்பதில்லை” என்று FPAI கூறியது.

Must Read | உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடவே கூடாத 7 உணவுகள்!

“உயர் ரத்தம் அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அதே போல, தங்களின் ரத்த அழுத்த அளவை அவ்வபோது பரிசோதித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், வீட்டிலேயே ஒரு ரத்த அழுத்த மானிட்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம்” என்று Project PrACHI எனப்படும், GHAI ஆதரவளித்த ஒரு தேசிய அளவிலான பிரச்சாரத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.



Project PrACHI என்பது Prioritizing Advocacy for Control of Hypertension in India – இந்தியாவில் உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டுக்கான முன்னுரிமை குழு.

GHIA – Global Health Advocacy Incubator – உலகளாவிய சுகாதார ஆலோசனை தொடக்க மையம்.

“இந்தியாவில் தொற்றுநோயியல் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நாம் உடனடியாக செயல்பட வேண்டும். இந்த நெருக்கடியை உடனடியாக எதிர்கொள்ளும் வகையில், இந்திய குடும்பக்கட்டுப்பாட்டு மையத்தில், நாடு முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகளை மேம்படுத்தி, வலுப்படுத்துவதில், இது வரை காணாத, பல ஆண்டுகள் இல்லாத புதிய அனுபவத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.

எங்கெல்லாம் பராமரிப்பு தேவை என்ற இடைவெளிகளைக் கண்டறிவதற்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குதல், இன்டர்-செக்டோரல் துறை சார்ந்த ஒன்றிணைந்து பணி செய்யும் ஒத்துழைப்பைக் கொண்டுவருதல், மற்றும் கவனத்தில் இருந்து எதையுமே தவற விடாமல் இருப்பதை உறுதி செய்ய, ஹைப்பர்டென்ஷனுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல், ஆகியவற்றுக்கான இருக்க வளங்களை சேகரித்தல், ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மேலும், இந்த சேவைகள் அனைவருக்கும், வயது, வசிக்கும் இடம் மற்றும் பொருளாதார நிலை உட்பட எந்த வேறுபாடும் இல்லாமல் கொண்டு சேர்க்கப்படும்." என்று FPAI பொதுச் செயலாளர் கல்பனா ஆப்தே கூறினார்.

உலக அளவில், கிட்டத்தட்ட 1.13 பில்லியன் மக்கள், இந்த நாட்பட்ட உயர் ரத்த அழுத்தத்துடன் வாழ்கின்றனர். அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்தியாவிலும், சிகிச்சை அளிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் (பிபி), திடீர் மரணம் மற்றும் இயலாமைக்கு முதன்மையான காரணமாக மாறியுள்ளது.

15-49 வயதிலுள்ள, ஐந்தில் ஒரு பெண்ணுக்கு, கண்டறியப்படாத ஹைப்பர்டென்ஷன் உள்ளது. இதன் தாக்கம், அவர்களின் தனிப்பட்ட உடல்நிலை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று PGIMER இன் கம்யூனிட்டி மெடிசின் துறை பேராசிரியர் சோனு கோயல் குறிப்பிட்டுள்ளார்.



GHAI இன் ரீஜினல் நிர்வாகியான வந்தனா ஷா, ‘பொதுமக்கள் சுகாதாரத்தில், அதிக அளவில் காணப்படும் ஹைப்பர்டென்ஷன் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பெருந்தொற்று, மக்கள் எவ்வாறு ஹைப்பர்டென்ஷன் போன்ற நாட்பட்ட நோய்களுடன் வாழ்கின்றனர் என்பதையும், அது எவ்வளவு ஆபத்தாக, இறப்பு கூட நேரிடும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டுக் காட்டுகின்றது.” என்று தெரிவித்தார்.

கார்டியோ வாஸ்குலார் டிசீஸ் (CVD) என்று பொதுவாக அழைக்கப்படும் இஸ்கெமிக் ஹார்ட் டிஸீஸ், மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களால், உலகம் முழுக்க கிட்டத்தட்ட 17.7 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். உலக சுகாதார மையம் கணித்திருப்பத்தின் படி, இந்த இறப்புகளில், ஐந்தில் ஒரு பங்கு, இந்தியாவில் ஏற்படுகிறது. ஹைப்பர்டென்ஷன் என்ற நோய் இருப்பது பற்றியே விழிப்புணர்வு கிட்டத்தட்ட இல்லாத போது, அதற்கான சிகிச்சையும், கட்டுப்பாடும் அதைவிடக் குறைவான அளவிலேயே காணப்படுகின்றன.

கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத ஹைப்பர்டென்ஷன், இதய நோய்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட இறப்பு ஏற்படுவதற்கான உயர் அபாயம் கொண்ட காரணியாகக் கருத்தப்படுகிறது.

இரத்த அழுத்த பரிசோதனை செய்து, உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்படாத வரை, இந்த பாதிப்பு இருப்பதே தெரியாது. ஏனென்றால், இதற்கென்ற தனிப்பட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை. புள்ளிவிவரங்கள் கணக்கெடுப்பாளர், மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள், ஹைப்பர்டென்ஷன் ஆபத்தானது என்றும், உடனடியாக சிகிச்சையும், கட்டுப்பாட்டு வழிமுறைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்திய பொது சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தும் விதத்தில் அறிவுறுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

FPAI இன் தலைவர் ரத்னமலா தேசாய், வழக்கமான நோய்த்தடுப்பு சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு வலியுறுத்தப்பட வேண்டும். குறிப்பாக உழைக்கும் இளம் வயதினர் (35-65 வயது வரை) மற்றும் குழந்தைபெறும் வயதில் உள்ள பெண்களும், இதய நோய்கள் மற்றும் பெண்களின் குழந்தை பேற்றை பாதிக்கக்கூடிய உயர் இரத்த அழுத்தத்தை, அவ்வபோது ஒரு அடிப்படை பரிசோதனையாக மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: