COVID-19 Vaccine | உறுப்பு மாற்று நோயாளிகளை பாதுகாக்க உதவும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!

30 உறுப்பு மாற்று நோயாளிகளில், 24 நோயாளிகளுக்கு வழக்கமான 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் 2 டோஸ் தடுப்பூசிகளுக்குப் பிறகும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. 

30 உறுப்பு மாற்று நோயாளிகளில், 24 நோயாளிகளுக்கு வழக்கமான 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் 2 டோஸ் தடுப்பூசிகளுக்குப் பிறகும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. 

  • Share this:
கொரோனா தடுப்பூசிகளின் எக்ஸ்ட்ரா டோஸ் சில உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கக்கூடும் என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கூடுதல் அளவு கொரோனா தடுப்பூசிகள் சில உறுப்பு மாற்று நோயாளிகளுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதில் தேவையான ஊக்கத்தை அளிக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைடிஸ் பி ஷாட் (hepatitis B shot) போன்ற பிற தடுப்பூசிகளின் எக்ஸ்ட்ரா டோஸை சில நேரங்களில் மருத்துவர்கள் தருகிறார்கள்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் அல்லது பிற பிரச்சனைகள் காரணமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அடக்கும் மருந்துகளை (immune-suppressing medicines) எடுத்து கொள்ளும் கோடிக்கணக்கன மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் கூட கொரோனா வைரஸிலிருந்து உண்மையில் எவ்வளவு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து நிச்சயமற்ற நிலையில்தான் உள்ளனர்.

ஏனென்றால், பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை தடுப்பூசிகள் புதுப்பிப்பது கடினம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் எடுத்து கொள்ளும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்துகள், புதிய உறுப்புகள் கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட கூடியவை. கொரோனா தடுப்பூசிகளின் ஆரம்ப கட்ட பரிசோதனையிலிருந்து உறுப்பு மாற்று நோயாளிகள் விலக்கப்பட்டதற்கு இதுவே காரணம். ஆனால் இப்போது மருத்துவர்கள் குறைந்தது சில பாதுகாப்பின் நம்பிக்கையில் அவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

Annals of Internal Medicine-ல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், 30 உறுப்பு மாற்று நோயாளிகளை கண்காணித்ததாக தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் இது தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்கள் அவர்களுக்கு உதவுமா என்பதை தெரிந்து கொள்வதற்கான முக்கியமான படியாகும். இந்த ஆய்வில் பங்கேற்ற 30 உறுப்பு மாற்று நோயாளிகளில், 24 நோயாளிகளுக்கு வழக்கமான 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால் 2 டோஸ் தடுப்பூசிகளுக்குப் பிறகும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

எனவே, வழக்கமான 2 தடுப்பூசி டோஸ்களுக்கு பிறகு எந்த பாதுகாப்பும் இல்லை என்று தோன்றிய 24 நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது 8 பேருக்கு எக்ஸ்ட்ரா டோஸ் செலுத்தப்பட்டு பரிசோதித்ததில் அவர்களுக்கு வைரஸ்-எதிர்ப்பு ஆன்டிபாடிகள் உருவானது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். குறைந்த பட்ச ஆன்டிபாடிகள் மட்டுமே இருந்த மற்ற 6 பேருக்கும் மூன்றாவது டோஸிலிருந்து பெரிய ஊக்கம் கிடைத்ததாக கூறி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேபோல தேசிய சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் இந்த ஆய்வுக்குழு, 200 உறுப்பு மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு மூன்றாவது தடுப்பூசி போடுவதற்கான கடுமையான பரிசோதனையை தொடங்க முடியும் என்று நம்புகிறது. இதுபற்றி பேசிய டாக்டர் டோரி செகேவ், இந்த ஆய்வின் முடிவு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஹாப்கின்ஸ் குழு சமீபத்தில் 650-க்கும் மேற்பட்ட உறுப்பு மாற்று நோயாளிகளை பரிசோதித்தது. அவர்களிடம் ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களுக்கு பிறகு சுமார் 54 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வைரஸ்-எதிர்ப்பு ஆன்டிபாடிகளை மட்டுமே கண்டறிந்தது. இது பொதுவாக ஒரு ஆரோக்கியமான நபர் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் உருவாகும் ஆன்டிபாடிகளை விட குறைவான அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published: