• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய கடும் கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய கடும் கட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் அதிரடி

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னையில் ஊரடங்கு அறிவிப்பை அடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் நுழைய கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகம் உள்ளதால், தமிழக அரசு 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட எல்லைகளிலும் இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமலும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலும் வருபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று ஆட்சியர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Also see:

    மேலும், சட்டத்திற்கு புறம்பாக மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாளை (16-ம் தேதி) முதல் மாவட்டம் முழுவதும் உள்ள 27 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் முக கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடத்திற்கோ அல்லது பேருந்தில் பயணம் செய்தாலோ ரூ 100 அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: