Exclusive: இந்தியப் பங்கு சந்தை சரிவிற்கு கொரோனா தாக்கம் காரணமா? நிபுணர் நாகப்பன் விளக்கம்!

Exclusive: இந்தியப் பங்கு சந்தை சரிவிற்கு கொரோனா தாக்கம் காரணமா? நிபுணர் நாகப்பன் விளக்கம்!
பங்கு சந்தை நிபுணர் நாகப்பன்
  • News18
  • Last Updated: February 18, 2020, 5:38 PM IST
  • Share this:
இந்தியப் பங்குச் சந்தைகளில் நான்காவது வா்த்தக நாளாக இன்றும் சரிவு ஏற்பட்டது. உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இதற்கு காரணமா என்று பங்கு சந்தை நிபுணர் நாகப்பன் விளக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கும், இந்திய பங்கு சந்தை சரிவிற்கும் தொடர்பு உண்டா?

இந்திய பங்குச் சந்தை சரிவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு நேரடியாக ஒரு காரணம் என சொல்ல முடியாது. ஆனால் அதன் தாக்கம் கணிசமாக இருக்கிறது. 2004-ம் ஆண்டு சார்ஸ் பாதிப்பு வந்த போது, சீன நாட்டின் பொருளாதார சூழல் வேறு. அப்போது உலக அளவில், சீன மொத்த உற்பத்தியில் நான்கு அல்லது ஐந்து சதவீதத்திற்கு கீழ் தான் பங்களிப்பு இருந்தது. ஆனால் தற்போது 17 சதவீதம் வரை சீன பங்களிப்பு உள்ளது. அந்த பொருளாதாரம் தேக்க நிலையை அடையும்போது, அதன் பொருளாதாரம் சார்புடைய இடங்களில் பாதிப்பு ஏற்படும்.


உதாரணமாக போக்குவரத்து துறை எடுத்துக்கொண்டால், சீனாவிற்கான சுற்றுலா போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. விளையாட்டு நிகழ்ச்சி, வர்த்தகம் சந்திப்புகள் தொடர்பான பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது. இன்னும் பெரிய அளவில் இதன் பாதிப்பை உணரவில்லை. இருப்பினும் இதுதொடரும் பட்சத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.

வாகன துறையைப் பொருத்தவரை பல நிறுவனங்கள் அங்கிருந்து வரக்கூடிய பொருட்களை நிறுத்திவிட்டனர். இதனால் உற்பத்தியும் குறைந்திருக்கிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கிறது. வாகனத் துறையை பொருத்தவரை இந்தியாவில் தேக்க நிலையில் இருப்பதன் காரணமாக, முழு தாக்கத்தை உணரவில்லை. நம் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருந்திருந்தால், இதன் பாதிப்பு மோசமாக இருந்திருக்கும்.

கொரோனா பாதிப்பு உலக அளவில் பொருளாதாரத்தில் எவ்வாறு பாதிப்பு ஏற்படுத்துகிறது?தாய்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு விமான நிறுவனம், தாய்லாந்தில் இருந்து சீனாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துவிட்டனர். அந்த விமான நிறுவனம் தனது சேவையில் அதாவது 90% ரத்து செய்துவிட்டு, 25,000 ஊழியர்களை பெஞ்சில் வைத்திருக்கின்றனர். இவ்வாறாக ஒவ்வொரு இடத்திலும் உலக அளவில் தாக்கம் ஏற்படுகிறது.

சீனா வைரஸ் பாண்ட் என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது. சிங்கப்பூரிலும் வைரஸ் ரிலீஸ் பேக்கேஜ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பணத்துக்கான தேவை சுகாதாரம் உள்ளிட்ட வேறு துறைகளுக்கு செல்லும்போது, மற்ற தொழில்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சீனாவில் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்பு, இந்தியாவிற்கு உற்பத்தி ரீதியாக வாய்ப்புகளை உருவாக்குமா?

இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்றால், கச்சா எண்ணெய் 20% இறக்குமதி குறைந்து இருக்கிறது. அதன் தாக்கம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் தெரிகிறது. தற்போது 52 டாலராக குறைந்துள்ளது. விலை 30% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது நமது அன்னியச் செலாவணியில் மிச்சத்தை ஏற்படுத்தும். நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் வரும். இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கம் குறையும். கச்சா எண்ணெய் விலை குறையும் போது, உணவு பொருட்கள் மீதான பணவீக்கமும் கட்டுக்குள் வரும். காப்பர் உள்ளிட்ட உலோகப் பொருட்களுக்கான விலையும் கணிசமாக குறைந்திருக்கிறது. வேலை இழப்புகள் சர்வதேச அளவில் நிகழும். அதை எவ்வாறு கையாளப் போகிறோம் என்பதை பார்க்கவேண்டும்.

Also see...
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்