கொரோனா லாக்டவுன் காலம்: பங்குச்சந்தை சரிவும், ஏற்றமும்....

கொரோனாவால் பாதிப்பை சந்தித்த பங்குச்சந்தைகள், மீண்டும் தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் என்ன? 

கொரோனா லாக்டவுன் காலம்: பங்குச்சந்தை சரிவும், ஏற்றமும்....
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா பாதிப்பால் பங்குச்சந்தைகள் அதளபாதாளத்திற்கு சென்று மீண்டும் சற்று எழத் தொடங்கியிருக்கின்றன. 2008-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாதிப்பை விட கொரோனாவின் பாதிப்பு பன்மடங்கு சந்தையில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய்யை வைக்க இடம் இல்லாமல், அதன் விலை மைனசில் சென்றது.

பாதிப்பை சமாளிக்க முடியாமல், கடன்பத்திரங்கள் சார்ந்த 6 பரஸ்பர நிதி திட்டங்களை நிறுத்துவதாக FRANKLIN TEMPLETON நிறுவனம் அறிவித்தபோது எல்லாம், சந்தைகள் உயர பல ஆண்டுகள் ஆகும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைத்து வரும் நிலையில், பங்குச்சந்தைகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார சுழற்சி மெல்ல மெல்ல தொடங்கும் என்ற நம்பிக்கையில் சந்தைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்ததால், சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி, 3 சதவிதம் என்ற அளவிற்கு குறைந்த இதே காலகட்டத்தில்தான், அதாவது ஒரே மாதத்தில் பல நிறுவனங்களின் பங்குகள் 100 சதவிதத்திற்கும் மேல் லாபம் கொடுத்துள்ளன.


ஆனால், தற்போதைய உயர்வு என்பது மிகவும் தற்காலிகமானது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. காரணம், இந்தியாவின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. அடுத்து வரும் காலாண்டு முடிவு இதுவரை இல்லாத சரிவை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநரும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பன்மடங்கு சரியும் என்று ஒப்புக் கொண்டுள்ளார். ராஜிவ் பஜாஜும், கொரோனாவை ஒழிக்க வைக்கப்பட்ட குறி, பொருளாதாரத்தின் மீது விழுந்துவிட்டதாக கூறியுள்ளார். இப்படி இருக்கும் போது, ஊரடங்கு காலத்தில் பொருளாதார நடவடிக்கையே இல்லாமல் இருந்த போது எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியும். எனவே, தற்போதைய பங்குச்சந்தை உயர்வு என்பது நிலையானது அல்ல என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

42,000 புள்ளிகளை கடந்து வணிகம் நடைபெற்று வந்த மும்பை பங்குச்சந்தை 25, 600 வரை சரிந்து, மீண்டும் தற்போது 34,000 கடந்துள்ளது. அதாவது சரிவை சந்தித்து, மீண்டும் இரண்டு மாதத்தில் சுமார் 9,000 புள்ளிகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...

பத்தாயிரத்தை நெருங்கியது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: எப்படி சமாளிக்கப்போகிறது சென்னை ?

 

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading