• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பதினைந்தே நிமிடத்தில் ரிசல்ட்! வீட்டிலேயே பரிசோதித்து கொள்ள உதவும் கொரோனா 'கிட்'

பதினைந்தே நிமிடத்தில் ரிசல்ட்! வீட்டிலேயே பரிசோதித்து கொள்ள உதவும் கொரோனா 'கிட்'

ரேப்பிட் ஆன்டிஜன் டெஸ்ட் கிட்-க்கு மத்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • Share this:
கொரோனா இரண்டாம் அலையால், பரிசோதனைக் கூடங்கள் நிரம்பி வழிகின்றன. மக்கள் கூட்டம் அலைமோதுவதால், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று எளிதாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. பரிசோதனை முடிவுகள் கிடைப்பதிலும் தாமதம் நிலவுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வீட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் கிட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரேப்பிட் ஆன்டிஜன் டெஸ்ட் (RAT) கிட்-க்கு மத்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆனால், இதில் சில கட்டுப்பாடுகளையும் ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களும், நோய் தொற்றுக்குள்ளான நபர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இந்த கிட்-ஐ வாங்கிப் பயன்படுத்துமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. ஹிராநந்தினி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சஹீல் அகமது பேசும்போது, இந்தக் கிட்டில் பாசிடிவ் வந்தால், கொரோனா தொற்றுள்ளது நிச்சயம் எனவும், வேறொரு பரிசோதனை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

RAT கிட் பயன்பாடு:

இந்த கிட்- ஐ பயன்படுத்த வேண்டும் என்ற செயல்முறைகள், கிட் பாக்சில் இடம்பெற்றிருக்கும். அதன்படி நாசிலில் முறையாக சாம்பிள் எடுத்த பிறகு, டெஸ்ட் கிட்டில் வைத்து பரிசோதிக்க வேண்டும். 15 நிமிடத்தில் முடிவுகள் காட்டப்படும். ஒருவேளை உங்களின் முடிவு பாசிடிவ் என வந்தால், மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அறிகுறி இருந்தும் டெஸ்ட் நெகடிவ் என வந்தால்,  RT PCR டெஸ்ட் சோதனையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாசிடிவ் என எப்படி தெரிந்து கொள்வது?

கிட்டில் சி மற்றும் டி என இரு கோடுகள் இருக்கும். நீங்கள் வைத்த சாம்பிள் 15 நிமிட சோதனைக்குப் பிறகு சி மற்றும் டி என இரு இடங்களிலும் கோடுகள் தெரிந்தால், உங்களுக்கு கொரோனா பாசிடிவ். சி பாக்சில் மட்டும் கோடு தெரிந்தால், உங்களுக்கு கொரோனா சோதனை நெகடிவ். இரு இடங்களிலும் கோடு தெரியவில்லை என்றால், நீங்கள் வாங்கிய கிட் உபயோகமில்லாதது என அறிந்து, மற்றொரு கிட்டை வாங்கி பரிசோதிக்க வேண்டும்.

அசௌகரியங்கள் ஏதேனும் உண்டா?

நீங்களே வீட்டில் சோதனை செய்து கொள்வதால் நாசில் பகுதிகளில் கூச்சம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அப்போது, சரியாக வைத்து சாம்பிள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் முடிவுகள் தவறாக கிடைக்க நேரிடும். ஒருவேளை பாசிடிவ் என வந்தால், சோதனை எடுக்க உதவியருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சோதனைக்கு தயாராவது எப்படி?

மிகவும் சுத்தமாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் தேர்தெடுத்திருக்கும் டேபிளை சானிட்டைஸ் செய்து கொள்ளுங்கள். கைகளை சோப்புபோட்டு சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர், கிட்டை ஓபன் செய்து டேபிள் மீது வைக்க வேண்டும். பரிசோதனையை தொடங்கும் முன்  சோதனை கருவியில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்-பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்படும் தரவுகளை நிரப்பவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: