அமெரிக்கா, ஜெர்மனி இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் பலனளிப்பு..

இந்த அறிவிப்பு கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கி வரும் நிறுவனங்கள், தங்கள் பரிசோதனைகளைத் தொடர ஊக்கமளிப்பதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன், இதுபோன்ற மேலும் பல பாதுகாப்பான, பயனுள்ள, விலை மலிவான தடுப்பூசிகள் தேவை என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஜெர்மனி இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் பலனளிப்பு..
மாதிரி படம்
  • News18
  • Last Updated: November 15, 2020, 10:08 AM IST
  • Share this:
அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே முகக்கவசங்களுக்குள் மூடி வைத்திருக்கும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. உலக அளவில் முதல் இரண்டு கட்ட சோதனைகளில் நம்பகமான தடுப்பூசி என்ற முடிவுகள் கிடைத்து, மூன்றாம் கட்ட சோதனையில் உள்ள 11 தடுப்பூசிகளில் 4 அமெரிக்காவில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைஸர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக ஃபைஸர் நிறுவன தலைவர் ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். முதல் முறை தடுப்பூசி செலுத்தப்பட்டு 28 நாட்களுக்கு பிறகும், இரண்டாவது முறை இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்ட 7 நாட்களுக்குப் பிறகும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


Also read... அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன் கொரோனா தடுப்புக்குழுவில் இடம்பெற்ற ஈரோடு பெண் மருத்துவர் செலின் கவுண்டர்..இந்த நிறுவனத்தின் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்றவர்களின் முதல் தொகுப்பு முடிவுகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தடுப்பூசி கொரோனாவை தடுக்கும் என ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும் முயற்சியில் தாங்கள் குறிப்பிடத்தக்க கட்டத்தை எட்டியிருப்பதாகவும், உலகமே இதனை எதிர்நோக்கி இருக்கும்போது, தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தில் தாங்கள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் 2020 ஆம் ஆண்டில் 5 கோடி டோஸ்களும், 2021 ஆம் ஆண்டில் 130 கோடி டோஸ்களும் தயாரித்து வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபைஸரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதுவரை இல்லாத அளவு பங்குச் சந்தையில் அதன் மதிப்பு உயர்ந்தது.ஃபைஸர் மற்றும் பயோன் டெக் நிறுவனத்தின் ஊக்கமூட்டும் இந்த அறிவிப்பை வரவேற்பதாகவும், கொரோனாவை வெல்ல பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும், இந்த மருந்து தயாரிப்பில் பங்கேற்றவர்களுக்கும் தலை வணங்குவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கி வரும் நிறுவனங்கள், தங்கள் பரிசோதனைகளைத் தொடர ஊக்கமளிப்பதாக கூறியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன், இதுபோன்ற மேலும் பல பாதுகாப்பான, பயனுள்ள, விலை மலிவான தடுப்பூசிகள் தேவை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு இந்தியா ஏற்கனவே ஃபைஸர் நிறுவனத்தை அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஃபைஸர் நிறுவனத்தின் மருந்து மைனஸ் 70 டிகிரி என்ற வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் இதனை கிராமங்களுக்கு வழங்குவதில் சிக்கல் உள்ளது. அதனால் இந்தியாவில் நகரப்பகுதிகளுக்கு மட்டும் ஃபைஸரின் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
First published: November 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading