செல்லப்பிராணிகளுக்கு கொரோனா பரவ காரணம் என்ன? வெளியான ஆய்வு முடிவு

மாதிரிப் படம்

செல்லப் பிராணிகளுக்கு மனிதர்கள் மூலமாகவே கொரோனா பரவுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

 • Share this:
  ஒன்றரை வருடங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளையும் விட்டு வைக்கவில்லை. வண்டலூர் பூங்காவில் இருக்கும் சிங்கங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் தொற்று பாதித்த சிங்கம் ஒன்று உயிரிழந்தது நினைவிருக்கலாம். விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு நாம் நினைப்பதை விட மிக விரைவாக தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலோ அல்லது தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகித்தாலோ வீட்டிலிருக்கும் குடும்ப உறுப்பினர்களோடு மட்டுமல்லாமல் செல்ல பிராணிகளோடும் விலகி இருத்தல் வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

  உலகம் முழுவதும் ஆச்சரியப்படும் எண்ணிக்கையிலான அளவு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. நெதர்லாந்தில் உள்ள Utrecht University-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி கூறும் போது, வேறு வழிகளை விட பெரும்பாலும் மனிதர்களிடமிருந்து தான் செல்லப்பிராணிகளுக்கு கோவிட் தொற்று பரவும் ஆபத்தும், வாய்ப்பும் மிக அதிகம் என்கின்றனர். நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்களுக்கு கோவிட் -19 ஏற்பட்டால், அவர்கள் அவற்றிடம் அருகில் சென்று பழகுவது மற்றும் விளையாடுவது உள்ளிட்ட தொடர்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

  மேலும் இதில் மற்றொரு சிக்கலும் காணப்படுகிறது. ஒருவேளை செல்லப்பிராணிகளுக்கு லேசான அறிகுறி அல்லது அறிகுறியற்ற தொற்று காணப்பட்டால், வைரஸின் தேக்கமாக செயல்பட்டு தொற்றை மீண்டும் மனிதர்களிடையே மீண்டும் அறிமுகப்படுத்தக்கூடும் என்பதே. ஆனால் அதிர்ஷ்டவசமாக தற்போது வரை செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவியதாக தகவல் ஏதுமில்லை. மனிதர்களிடையே நோய் தொற்று கண்டறியப்பட்ட சுமார் 196 வீடுகளில் இருந்த 156 நாய்கள் மற்றும் 154 பூனைகள் என மொத்தம் 310 செல்லப்பிராணிகளிடம் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

  இதில் 6 பூனைகள் மற்றும் 7 நாய்கள் பாசிட்டிவ் பி.சி.ஆர் முடிவை அளித்தன, மேலும் 54 விலங்குகள் (31 பூனைகள் மற்றும் 23 நாய்கள் ) வைரஸ் ஆன்டிபாடிகளுக்கு பாசிட்டிவ் ரிசல்ட்டை காட்டின. அதாவது சுமார் 17% விலங்குகள்(31 பூனைகள் மற்றும் 23 நாய்கள்) கோவிட்-19 தொற்றுக்கான ஆன்டிபாடிகளை கொண்டிருந்தன. இதற்கு அர்த்தம் இவையும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தான். இந்த ஆய்வின் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் செல்லப்பிராணிகளில் கோவிட் -19 அதிகம் காணப்படுவது தெரிய வந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கனடாவின் Ontario-வில் நடத்தப்பட்ட இதே போன்ற ஆய்வில், நாய்களைக் காட்டிலும் பூனைகள் தங்கள் உரிமையாளர்களுடன் அதிக நேரம் செலவழித்திருப்பது தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதை காட்டியது. கோவிட் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் படுக்கையில் தூங்கும் செல்லப்பிராணிகளுக்கு தொற்று பரவும் ஆபத்து அதிகம். நாய்களைக் காட்டிலும் பூனைகள் தங்கள் உரிமையாளருக்கு நெருக்கமாக தூங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பூனைகளுக்கு கோவிட் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே எந்த ஒரு செல்லப்பிராணிக்கும் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கோவிட் பாதிக்கப்பட்ட நபர்கள் அவற்றிடம் விலகி இருக்க வேண்டும்.
  Published by:Karthick S
  First published: