வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடத்தை உறுதி செய்யவேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
தொழிலாளர்கள்
  • Share this:
மாநில அரசுகள் தற்காலிக முகாம்கள் அமைத்து இடம்பெயர்ந்து வேலை தொழிலாளர்கள் உள்பட அனைத்து ஏழை மக்களுக்கும் தேவையான தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு நடந்தே சென்றுவருகின்றனர். அதனால், ஊரடங்கு உத்தரவை மீறி டெல்லியில் ஆயிரக்கணக்கானோர் திரளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்பட ஏழைத் தொழிலாளர்களுக்கு தங்குமிடமும் உணவும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்வது, சமூக இடைவெளியை ஏற்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறுவதாகும்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இடம்பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உள்பட ஏழைகளுக்கு மாநில அரசுகள் தற்காலிக தங்குமிடங்கள் அமைத்துக்கொடுத்து உணவுகள் வழங்கவேண்டும்.


தங்களுடைய மாநிலத்துக்குச் செல்வதற்காக இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் தற்போது இருக்கும் மாநில அரசுகள் அருகிலுள்ள தங்குமிடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு சோதனை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் அவர்களுடை ஊழியர்களுக்கு வழக்கமான உரிய ஊதியத்தை எந்த பிடித்தமும் இல்லாம் முழுமையாக வழங்கவேண்டும்.

இடம்பெயர்ந்து வேலை பாரக்கும் தொழிலாளர்கள் உள்பட எந்த பகுதியிலுள்ள தொழிலாளர்களும் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் சூழலில் வீட்டு உரிமையாளர்கள் அவர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது.தொழிலாளர்கள், மாணவர்களை வீட்டைக் காலி செய்யச்சொல்லி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கூறப்பட்ட உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியது தனிப்பட்ட முறையில் மாவட்ட நீதிபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பொறுப்பாகும். மாநில அரசுகள் மேற்கூறிய உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவேண்டும்.

Also see:
First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading