உணவின்றி தவிக்கும் தமிழக ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் - டிடிவி தினகரன் கவலை

”மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்ய வேண்டும்”

உணவின்றி தவிக்கும் தமிழக ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் - டிடிவி தினகரன் கவலை
டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.
  • Share this:
கொரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் சிக்கியுள்ள லாரியின் ஓட்டுநர்களும் கிளீனர்களும் உணவின்றி தவிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ”கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற லாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.

அதில் சென்ற ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலை அளிக்கிறது. மேலும் லாரிகளில் உள்ள பல லட்ச ரூபாய் சரக்குகளுக்குப் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


எனவே மத்திய, மாநில அரசுகள் இவர்களுக்கு உதவுவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading