கொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்' நடிகர் மரணம்

கொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்' நடிகர் மரணம்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பிரபல ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 76.

சீனாவின் ஊஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சத்தின் உச்சகட்டத்தில் உறைய வைத்துள்ளது. உலகின் வல்லாதிக்க நாடுகளே இந்த வைரஸைக் கண்டு அச்சமடைந்து பாதிப்பைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

உலகம் முழுவதும் 40,000-க்கும் அதிகமானாரை உயிரிழக்கச் செய்துள்ள இந்தக் கொடிய வைரஸுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.


வேகமாக பரவி வரும் இந்தக் கொடிய வைரஸ் உலகின் பல முன்னணி நடிகர்களையும் விட்டு வைக்கவில்லை. டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு நலமடைந்து வருவதாக சமீபத்தில் தெரிவித்தனர்.

அதேவேளையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 70 வயதுடைய பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அந்தவரிசையில் ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் மரணமடைந்துள்ளார். 76 வயதாகும் இவர் நடிப்பு பயிற்சியாளராகவும் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: இந்த நான்கு வழிகளை பின்பற்றினாலே நுரையீரலை வைரஸிடமிருந்து பாதுகாக்கலாம்..!First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading