Home /News /coronavirus-latest-news /

மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் கண்டனம்

மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பொதுமுடக்கம் காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் வசூலித்து நுகர்வோரைத் துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மக்களிடம் 'மங்காத்தா சூதாட்டம்' போல் மின்கட்டண வசூலில் ஈடுபடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் நான்கு மாத மின் நுகர்வை இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரித்து வசூலிப்பது பகல் கொள்ளை எனவும் மு.க. ஸ்டாலின்  சாடியுள்ளார்.

    மேலும், முந்தைய மாதம் மின் நுகர்வோர் செலுத்திய கட்டணம், மொத்த யூனிட்டை இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிப்பது, வீதப் பட்டியல் மாற்றத்தால் ஏற்படும் அதிக கட்டணம் ஆகியவற்றால் மக்கள் அடைந்த குழப்பங்களுக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    பொது முடக்கத்தில் தொழிலே இல்லாத சிறு, குறு நிறுவனத்தினர் எப்படி மின் கட்டணம் செலுத்துவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ள அவர், முந்தைய மாத கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்கு கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மின்கட்டணம் தொடர்பாக வேண்டுமென்றே உருவாக்கி இருக்கும் குழப்பங்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    மேலும் படிக்க...

    ஊரடங்கு காரணமாக இயங்காத தொழிற்சாலைகள் - குறைந்த மின்சார பயன்பாடு: தமிழகத்தில் எத்தனை சதவிகிதம்?

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: DMK president Stalin, Electricity bill, Lockdown

    அடுத்த செய்தி