கொரோனா நோயாளிகளுக்காக திறந்தவெளி மருத்துவமனையாக மாறும் மைதானம்

கொரோனா நோயாளிகளுக்காக திறந்தவெளி மருத்துவமனையாக மாறும் மைதானம்
  • Share this:
பக்கெம்பு மைதான அரங்கம் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மைதானமாக மாற்றப்பட உள்ளது.

சர்வசே அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகி வருவதால் அவர்களை மருத்துவமனையில் தனிமைப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரேசிலின் ஸா பாலோவில் உள்ள பக்கெம்பு மைதானத்தை திறந்தவெளி மருத்துவமனையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் உள்ள முக்கிய மருத்துவமனைகளின் அருகில் இந்த மைதான அரங்கம் உள்ளதால் திறந்தவெளி மருத்துவமனையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 45,000 பேர் வரை அமரும் இருக்கை வசதிகள் கொண்டது.


பிரேசிலில் இதுவரை கொரோனா வைரஸால் 1600 பேர் பாதிக்கப்பட்டும் 25 பேர் உயிரிழந்தும் உள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அடுத்துவரும் 10 நாட்களில் பக்கெம்பு மைதானத்தில் 200 படுக்கை வசதிகளுடன் கொண்ட திறந்தவெளி மருத்துவமனையை  மாற்றப்பட உள்ளது.

ஷா பாலோவில் இந்த மைதானத்தில் 2 நாட்களுக்கு முன்னரே மைதானத்தை புனரமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. 1940-ம் ஆண்டு திறக்கப்பட இந்த மைதானத்தில் 1950ம-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading