Sputnik V: ஸ்புட்னிக்-வி உற்பத்தி இந்தியாவில் தொடக்கம்: ஆண்டுக்கு10 கோடி டோஸ் தயாரிக்க இலக்கு!

கோப்புப் படம்

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின், அவசரகால பயன்பாட்டிற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது

  • Share this:
    ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தி இந்தியாவில் இன்று தொடங்கியது. ஆண்டுக்கு 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின், அவசரகால பயன்பாட்டிற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, ரஷ்யாவில் இருந்து இரண்டு கட்டங்களாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது.

    மேலும், இந்தியாவிலேயே  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்கவும் முடிவு  செய்யப்பட்டது.  ஸ்புட்னிக்-வி தயாரிப்புக்கு அவசரகால பயன்பாட்டின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து, இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தயாரிப்பு இன்று தொடங்கியது,  ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் பேனேசியா பயோடெக்  நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.  இங்கு தயாரிக்கப்படும் முதல் பேட்ச் தரப் பரிசோதனைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.  இதை தொடர்ந்து  இங்கு ஆண்டுக்கு 10 கோடி ஸ்புட்னிக் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான போரில் ஸ்புட்னிக்-வி தயாரிப்பு மைல் கல்லாக இருக்கும் என பேனேசியா பயோடெக்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்  ராஜேஷ் ஜெயின் கூறியுள்ளார்.

    சர்வதேச அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் எதிர்காலத்தில் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின்சி.இ.ஓ. கிரில் டிமிட்ரி தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: