Home /News /coronavirus-latest-news /

90 % இருக்கைகள் நிரம்ப வேண்டும்...! சிறப்பு ரயில் இயக்க ரயில்வே விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

90 % இருக்கைகள் நிரம்ப வேண்டும்...! சிறப்பு ரயில் இயக்க ரயில்வே விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

கோப்புப்படம்

கோப்புப்படம்

குறிப்பிடப்பட்ட இந்த நிபந்தனைகளை மீறி செயல்பட்டால் ரயில் ரத்து செய்யப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே துறை சார்பில் மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி எந்தெந்த மாநிலங்களுக்கு பயணிகளை அனுப்ப வேண்டுமோ அதை முன்கூட்டியே இரண்டு மாநில அரசுகளும் கண்காணித்து முடிவு எடுக்க வேண்டும். பின்னர் அதை ரயில்வே துறையிடம் தகவல் தெரிவித்தால் அதற்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படும்.

தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில் 1200 க்கும் மேற்பட்டோர் பயணிக்க முடியும். ஆனால், இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டுமென்றால் 90% இருக்கைகள் நிரம்பி இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளின் பயணச் செலவை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும். அதே போல ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு வரக்கூடிய நபர்கள் நோய்த்தொற்று சோதனை செய்து இருக்க வேண்டும்.

காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பின் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லக்கூடிய அவர்களுடைய விவரங்கள் முன்கூட்டியே 2 மாநிலங்களும் தெரிந்துகொண்டு பின்பே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மட்டுமே செல்லும். அதனை தவிர வழியில் எங்கும் நிறுத்தப்படாது. அதேபோல ஒவ்வொரு பகுதிகளிலும் பயணிகள் ஒன்று சேராமல் இருக்க கண்காணிப்பு பணிகள் செய்யப்படும்.

மேலும், பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் போது மேல் படுக்கை மற்றும் கீழ் படுக்கை மட்டுமே பயன்படுத்தப்படும் நடுவில் இருக்கக்கூடிய படுக்கை பயன்படுத்த அனுமதி இல்லை. முக கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.

ரயில் நிலையத்திற்கு வரும் முன்பு காய்ச்சல் சோதனை செய்யப்படும் அவருக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்.

ரயில் நிலையம் வரை சுத்திகரிக்கப்பட்ட பேருந்தில் பயணிகள் அழைத்து வரப்பட வேண்டும். பின்னர் சொந்த மாநிலங்களுக்கு சென்ற பிறகு அந்த மாநில அரசு சுத்திகரிக்கப்பட்ட பேருந்து மூலமாக அவர்களை அழைத்துச் செல்லும்.

குறிப்பிடப்பட்ட இந்த நிபந்தனைகளை மீறி செயல்பட்டால் ரயில் ரத்து செய்யப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus, Indian Railways, Lockdown

அடுத்த செய்தி