224 டன் ஆக்சிஜனுடன் டெல்லி வந்தடைந்த சிறப்பு ரயில்!

சிறப்பு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்

குஜராத் மாநிலத்தில் இருந்து 224. 6 டன் ஆக்சிஜனுடன் புறப்பட்ட சிறப்பு ஆக்சிஜன் ரயில் இன்று டெல்லி வந்தடைந்தது

 • Share this:
  குஜராத் மாநிலத்தில் இருந்து 224. 6 டன் ஆக்சிஜனுடன் புறப்பட்ட சிறப்பு ஆக்சிஜன் ரயில் இன்று டெல்லி வந்தடைந்தது.

  கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சம் என்ற அளவில் உள்ளதால் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு போதிய படுக்கைகளும், ஆக்சிஜன்களும் இல்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

  டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.  ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்  ஒருபகுதியாக, ஆக்சிஜன் தேவை உள்ள மாநிலங்களுக்கு சிறப்பு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரயில் மூலம் மருத்துவ பயன்பாட்டிற்கான திரவ ஆக்சிஜன் எடுத்து செல்லப்படுகின்றன.  மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம்,  மத்தியப் பிரதேசம், டெல்லி,  தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு  சிறப்பு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் ஆக்சிஜன்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

  இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரேநாளில் 719 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பட்டிற்கான  திரவ ஆக்சிஜன், 41 டேங்கர்கள் மூலம் ரயிலில் எடுத்து செல்லப்பட்டு பல்வேறு  மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், குஜராத் மாநிலம் ஹப்பாவில் இருந்து 11 டேங்கர்களில்  224.6 டன்  மருத்துவ பயன்பட்டிற்கான  திரவ ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு சிறப்பு ஆக்சிஜன்  எக்ஸ்பிரஸ்  புறப்பட்டது. ஒரே ரயிலில் அதிக அளவில் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது இதுவே முதன்முறையாகும். நேற்று இரவு புறப்பட்ட இந்த ரயில் இன்று டெல்லி வந்தடைந்தது.

  நாடு முழுவதும்  இதுவரை  4,200 டன்  மருத்துவ பயன்பட்டிற்கான  திரவ ஆக்சிஜன்   268 டேங்கர்களில் சிறப்பு ரயில்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு விநியோகிப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: