கொரோனாவால் உயிர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள நபர்களுக்கு வழிகாட்டுதல் தயாரிக்க சிறப்புக்குழு

”இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கலாம் என அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக கட்டுப்படுத்த கூடுமான முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது”

கொரோனாவால் உயிர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள நபர்களுக்கு வழிகாட்டுதல் தயாரிக்க சிறப்புக்குழு
கோப்புப் படம்
  • Share this:
கொரோனா தொற்றுக்கு ஆளானால் உயிர் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள நபர்களுக்கு வழிகாட்டுதல் தயாரிக்க சிறப்பு  அரசு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள், புற்று நோய்கள், சிறுநீரக கோளாறுகள்,  குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், காச நோய், முதியவர் நலன், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனநலம் ஆகிய துறைகளில் 12 மருத்துவர்கள் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சனைகளை சார்ந்து கொரோனா சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் உருவாக்குவார்கள். அந்த வழிகாட்டுதலில் சிகிச்சைக்கான மருந்துகள், உணவு, தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைப்பது, இணைய வழி ஆலோசனை உட்பட அனைத்துக்குமான வழிகாட்டுதல் குறிப்புகள் உருவாக்கப்படும்.


கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழந்த நபர்களில் பெரும்பாலானவர்கள் வேறு நோய் பாதிப்புகளை கொண்டிருந்தவர்களே ஆவர். 50 வயதுக்கு கீழான நபர்களிடம் ஏற்பட்ட மரணங்களில்தான் வேறு நோய் பாதிப்பு இல்லாதவர்கள் உள்ளனர்.

இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கலாம் என அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக கட்டுப்படுத்த கூடுமான முயற்சிகளை அரசு மேற்கொள்கிறது. அதற்காகவே புதிய குழுக்கள் அமைக்கப்பட்டு வழிகாட்டல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்கள் பல்வேறு நோயாளர் நலன் சார்ந்த அமைப்புகளுடன் விவாதிப்பார்கள், சர்வதேச ஆய்வுகளையும் கணக்கில் கொள்வார்கள், தமிழக மருத்துவ கட்டமைப்பின் தன்மைக்கு ஏற்ற ஆலோசனைகளை முடிவு செய்வார்கள். கொரோனா பாதிப்புக்கு பிறகான புதிய நிலைமைகளில் இந்த ஆலோசனைகள் பெரும் பங்கு வகிக்கும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Also see...
First published: May 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading