கொரோனா நோயாளிகளுக்கு 3 விதமான சிகிச்சை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- News18 Tamil
- Last Updated: August 14, 2020, 2:30 PM IST
கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து இருந்தாலும், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடைசி நேரத்தில் மூச்சு திணறலோடு வருவதால் காப்பாற்ற முடியாமல், உயிரிழப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை தவிர்ப்பதற்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று பிரத்யேக அவசர சிகிச்சை முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு பெரும்பாலும் ஆக்சிஜன் மிகக் குறைவாக இருக்கும் எனக் கூறும் மருத்துவர் பரந்தாமன், அதை பார்த்தாலே கொரோனா என்பதை உறுதி செய்து விடுவோம் என தெரிவிக்கிறார்.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு தான் பிரச்சனையை ஏற்படுத்துவதால், நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை நள்ளிரவு நேரத்திலுயும் கண்காணிக்க தனி செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனை வருவதால் தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், சிறிய அளவிலான காய்ச்சல் ஒரு நாள் இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு வந்தால், அவர்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ALSO READ | தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறையும் மாவட்டங்கள் எவை?