கொரோனா: ஸ்பெயினில் முடங்கிய மக்களை உற்சாகப்படுத்தும் பாடகி!

”தான் என்ன பாடல் பாட வேண்டும் என்பதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் கேட்டறிகிறார்”

கொரோனா: ஸ்பெயினில் முடங்கிய மக்களை உற்சாகப்படுத்தும் பாடகி!
இசைக்கச்சேரி நிகழ்த்தும் பீட்ரிஸ், ஆண்ட்ரியா கபல்போ.
  • Share this:
ஸ்பெயினின் மேட்ரிட் பகுதியில் கொரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களை பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தி வருகிறார் பாடகி பீட்ரிஸ் பெரோடியா.

தனது வீட்டின் பால்கனியில் இருந்து தினமும் இரவில் அரை மணி நேரம் இசைக்கச்சேரி நிகழ்த்தும் பீட்ரிஸுடன் அவரது அண்டை வீட்டில் வசிக்கும் ஆண்ட்ரியா கபல்போ இணைந்து கிடார் இசைக்கிறார். இந்த இசைக்கச்சேரிக்கு அண்டை அயலாரிடம் வரவேற்பு பெருகியதால், தான் என்ன பாடல் பாட வேண்டும் என்பதை தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் தெரியப்படுத்தும்படி எழுதப்பட்ட அறிவிப்பு அட்டை ஒன்றையும் அந்தப்பாடகி தொங்க விட்டிருக்கிறார். 
View this post on Instagram

 

A post shared by Betta (@musicbetta) on Mar 16, 2020 at 7:47am PDT
 

Also see:
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்