சாதி, மதம் வைத்து கொரோனா வதந்தி பரப்பினால் நடவடிக்கை...! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!

சாதி, மதம் வைத்து கொரோனா வதந்தி பரப்பினால் நடவடிக்கை...! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!
  • Share this:
சாதி, மதம் வைத்து கொரோனா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

நியாய விலை கடைகளில், கொரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. கோவை குனியமுத்தூர் பகுதியில், நிவாரணத் தொகை வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் இருந்து சென்று, டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட பத்துக்கும் மேற்பட்டவர்களின் தகவல் தெரியவில்லை என்று கூறினார்.

மதத்தை குறிப்பிட்டு கொரோனா வதந்தி பரப்பப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்த அவர், சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை என்றும், அவ்வாறு வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.







இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading