சென்னையில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் எஸ்.பி வேலுமணி

சென்னை மாநகராட்சியில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில், சமூக களப்பணி திட்டம் செயல்படுத்துவதன் மூலம், கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்

சென்னையில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் எஸ்.பி வேலுமணி
எஸ்.பி.வேலுமணி
  • Share this:
சென்னையில் தினமும் சராசரியாக 10,200 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தப் பரிசோதனையை 11,000 உயர்த்த தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக 50,000 படுக்கை வசதிகளுடன் கூடிய மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், தற்பொழுது வரை இந்தத் தனிமைப்படுத்தும் மையங்களில் சுமார் 10,000 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.


வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வைரஸ் தொற்று கண்டறியவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பாக சேவை வழங்குவதற்கு நுண் திட்டத்தை தயார் செய்துள்ளதாகவும், வைரஸ் தொற்று அறிகுறி உள்ள அனைவருக்கும் பரிசோதனை மாதிரி எடுக்கப்படும் எனவும், ஒவ்வொரு 100 வீடுகளுக்கும் ஒரு களப்பணியாளர் நியமிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சென்னையில் தினமும், சராசரியாக 10,200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தப் பரிசோதனைகளை 11,000 உயர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னையில் 10 லட்சம் மக்களுக்கு 21,000 பரிசோதனையும், தமிழ்நாட்டில் 7,000 பரிசோதனையும் செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில், சமூக களப்பணி திட்டம் செயல்படுத்துவதன் மூலம், கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

சென்னை நீங்கலான பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில், இதுவரை 1,722 பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read... கொரோனா பாசிடிவ் வந்தால் பயம் வேண்டாம் - அமைச்சர் விஜய பாஸ்கர் விளக்கம்

இம்மண்டலங்களில் 1.52 லட்சம் வீடுகளில், 5.60 லட்சம் மக்கள் உள்ளதாகவும், இவற்றில் 2.30 லட்சம் நபர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading