ஹோம் /நியூஸ் /கொரோனா /

பாடகர் எஸ்.பி.பி.க்கு சிகிச்சையளிக்கும் அவரது பாடல்கள்...!

பாடகர் எஸ்.பி.பி.க்கு சிகிச்சையளிக்கும் அவரது பாடல்கள்...!

எஸ்.பி பாலசுப்பிரமணியம்

எஸ்.பி பாலசுப்பிரமணியம்

S. P. Balasubrahmanyam | கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ள SPB அவர்களுக்கு அவர் பாடிய பாடல்களை ஒலிப்பரப்பி ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழ் இசை உலகம் மட்டும் அல்ல 18 இந்திய மொழிகளில் 40,000 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாடல்களின் பிரம்மாவாக வாழ்ந்து வருபவர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். மன அழுத்தத்தால் இருக்கும் பலருக்கு அவரது பாடல்கள் தான் இன்றும் ஒரே தீர்வு. ஆனால், கொரோனா சிகிச்சையால் மருத்துவமனையில் இருக்கும் அவருக்கும் அவரது பாடல்களை ஒலிக்கவைத்தே சிகிச்சை கொடுக்கப்படுகின்றது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த 13-ம் தேதியில் இருந்து மோசம் அடைந்தது. நுரையீரல் தொற்று கடுமையாக தாக்கி நுரையீரல் செயலிழக்கும் நிலைக்கு சென்றதால் செயற்கை சுவாசமும், எக்மோ சிகிச்சையும் கொடுக்க முடிவெடுத்தனர் மருத்துவர்கள்.

திவீர சிகிச்சைக்கு செல்லும் முன் அதே மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியுடன் வீடியோ காலில் பேசிய அவர், விரைவில் குணமடைந்து விடுவேன். பயப்படாதே சேர்ந்தே வீட்டிற்கு போகலாம் என்று சொல்லியுள்ளா.ர் ஆனால் எதிர்பாராத விதமாக அன்று இரவே உடல்நிலை மோசமானது.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மெல்லிசை பாடல்களை கேட்கவைத்து அதன் மூலமாக அவர்களது மன இறுக்கத்தை போக்கும் சிகிச்சையும் கொடுக்கப்படுகின்றது

அதே போன்று செயற்கை சுவாசத்தில் உள்ள SPB-க்கு அவர் பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள், மெல்லிசை பாடல்கள் என சிகிச்சை பெறும் அறையில் ஒலிக்கவைக்கப்படுகின்றன. இதன் மூலமாக அவரின் மன அழுத்ததை குறைத்து கான்சியஸ் அளவை உயர்த்தாம் என நினைக்கின்றனர் மருத்துவர்கள்.

40,000 பாடல்களை பாடிய இசை உலகின் பிதாமகனாக வலம் வரும் அவரின் சிகிச்சைக்கு அவரது பாடல்களே இசைக்கப்படுவது, அவருக்கு அவரது பாடல்கள் நன்றி சொல்லும் விதாமாக அமைந்துள்ளது.

First published:

Tags: CoronaVirus, S.P.Balasubramaniyam