ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா பீதிக்கு இடையில் தென்கொரியாவில் நடக்கும் தேர்தல்..!

கொரோனா பீதிக்கு இடையில் தென்கொரியாவில் நடக்கும் தேர்தல்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இதுவரை தென்கொரியாவில் கொரோனாவால் 225 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தென் கொரியா தனது 21-வது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலை நடத்தி வருகிறது.

  தென்கொரியாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், தேர்தல் நடக்கிறது. குறிப்பாக வாக்களர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டு, அவர்களின் உடல் வெப்பநிலை சோதனைக்கு உள்ளப்பட்ட பின் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவர்.

  மேலும் அவர்களுக்கு, அங்கு கை சுத்திகரிப்பானும், கையுறைகளும் வழங்கப்படுகின்றன. பின்னரே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். நோய் அறிகுறிகளுடன் வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள், மாலை 5 முதல் 7 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. சுகாதார பணியாளர்களை அழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தென்கொரியாவில் இதுவரை கொரோனாவால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 225 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CoronaVirus, Election, North and south korea