தென் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று

Corona | தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது

தென் மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 16, 2020, 8:24 PM IST
  • Share this:
தென் மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 10 தென் மாவட்டங்களில், ஆறு மாவட்டங்களில் 100க்கும் அதிகமான தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை- 267, தூத்துக்குடி-171, கன்னியாகுமரி-146, விருதுநகர்-145, திருநெல்வேலி-130, திண்டுக்கல்-126, ராமநாதபுரம்-90, சிவகங்கை-83, தேனி-78, தென்காசி-20 என இந்த 10 மாவட்டங்களில் 1,256 பேருக்கு இன்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 10 மாவட்டங்களில் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள 1,56,369 தொற்றுகளில், ஒட்டுமொத்தமாக பத்து தென் மாவட்டங்களில் இதுவரை 24,865 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 12,186 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,368 பேர் சிகிச்சையில் உள்ளனர். 311 பேர் உயிரிழந்துள்ளனர்.





படிக்க: ₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சி

படிக்க: இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்


தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் மட்டும் இன்று 267 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மதுரையில் மொத்தம் 7597 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 4,234 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,929 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரையில் மட்டும் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர்.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading