கொரோனா தொற்றால் பிரபல வங்காள நடிகர் மரணம் - பிரதமர் இரங்கல்

வங்காளம் போற்றும் நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மதியம் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பிரபல வங்காள நடிகர் மரணம் - பிரதமர் இரங்கல்
சௌமித்ர சாட்டர்ஜி
  • Share this:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல வங்காள நடிகர் மரணமடைந்தார். அவருக்கு வயது 85.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று குறைந்திருந்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல்வாதிகள், மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டும் பலர் குணமடைந்து வருவதையும் அன்றாடம் பார்த்து வருகிறோம். ஆனால் அதேவேளையில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


இந்நிலையில் வங்காளம் போற்றும் நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று மதியம் உயிரிழந்தார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மரணம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் சௌமித்ர சாட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: விவாகரத்தாகி 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பிரபு தேவாவுக்கு திருமணம்?சத்யஜித் ரே, மிருணாள் சென் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கும் சௌமித்ர சாட்டர்ஜி தேசிய விருது, பத்ம பூஷன், தாதா சாகேப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான சன்ஜ்பாதி படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: November 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading