கொரோனா தடுப்பூசிகளைத் திருடிச் சென்ற நபர்: மனம் மாறி திரும்பவும் ஒப்படைத்தார்

மாதிரிப்படம்.

ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற இடத்தில் 1,700 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி கொண்ட பையைத் திருடிச் சென்ற கள்வன் மனம் திருந்தி தடுப்பூசியை மீண்டும் உரிய இடத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Last Updated :
 • Share this:
  ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற இடத்தில் 1,700 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி கொண்ட பையைத் திருடிச் சென்ற கள்வன் மனம் திருந்தி தடுப்பூசியை மீண்டும் உரிய இடத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருப்பி ஒப்படைக்கும் போது, ‘உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியாமல் திருடி விட்டேன் மன்னிக்கவும்’ என்று குறிப்பையும் வைத்துள்ளான்.

  “கொரோனாவுக்கான மருந்துகள் என்று எனக்குத் தெரியாது, மன்னிக்கவும்” என்று குறிப்பி எழுதி வைத்து விட்டு பையை ஒப்படைத்துள்ளான்.

  இப்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர். சிவில் லைன்ஸ் காவல் நிலையத்துக்கு அருகே தேநீர் கடை ஒன்றில் இந்தத் திருடன் வாக்சின் அடங்கிய பையை ஒப்படைத்துள்ளான்.

  ஒப்படைக்கும் போது தான் போலீஸாருக்கு உணவு கொடுக்க வந்தவன் என்றும் தான் வேறு இடத்துக்குப் போக வேண்டியிருப்பதால் இதை ஒப்படைக்குமாறு தேநீர் கடை க்காரரிடம் கூறியுள்ளான்.

  வைரஸுக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து என நினைத்து தவறாக தடுப்பூசி பேகை திருடிச் சென்றிருப்பான் என்று போலீசாருக்கு சந்தேகம் இருந்தது.

  ரெம்டெசிவிர் மருந்து களவு போவது உத்தரப் பிரதேசம், ஹரியாணாவில் சகஜமாகி வருவதையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் இதற்கு முன் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 2,263 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 14.93 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 83.92 ஆகக் குறைந்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: