வங்கிகள் EMI வசூலிப்பை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

நம்சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவினரின் பொருளாதார ரீதியான வேதனைகளை, சந்திக்கும் உடல்ரீதியான பிரச்சினைகளை அடையாளம் காண இது உதவும் என நம்புகிறேன்

வங்கிகள் EMI வசூலிப்பை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்
பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி
  • Share this:
வங்கியில் கடன்வாங்கியிருக்கும் விவசாயிகள், மாத ஊதியதாரர்கள் மாத தவணை செலுத்துவதற்கு ஆறு மாதகால அவகாசம் வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை முழுமையாக ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் முழு ஆதரவு அளித்து இணைந்து செயல்படுவோம் என்று காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் நான் இதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கரோனா வைரஸ் எனும் பெரும் தொற்று நோய் உலக நாடுகளை தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது, மக்களுக்கு உடல்நலக் கேடுகளையும், உயிர்பலியையும் ஏற்படுத்தி வருவது இந்தியாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற சவாலான, உறுதித்தன்மைஇல்லாத நேரத்தில் ஒவ்வொருவரும் சுயநலம் இன்றி நாட்டின் நலனுக்காகவும், கவுரத்துக்காகவும்,ம மனிதநேயத்துக்காகவும் எழுந்து நிற்பது கடமையாகும். லட்சக்கண்ககான மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கவலைக்குள்ளாக்கி, குறிப்பாக சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்து. கரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையுடன் இருந்து தோற்கடிக்க வேண்டும்.

இதுபோன்ற மிகப் பெரிய சுகாதரப் பிரச்னையை கையாள்வதற்கு அரசுக்கு துணையாக நிற்பதாலும், ஒத்துழைப்பதாலும் நான் சில திட்டங்களைச் சொல்ல விரும்புகிறேன். நம்சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவினரின் பொருளாதார ரீதியான வேதனைகளை, சந்திக்கும் உடல்ரீதியான பிரச்சினைகளை அடையாளம் காண இது உதவும் என நம்புகிறேன்.

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்மூலம், சுகாரத்துறைக்காக பணியாற்றும் எந்த ஒரு ஊழியரும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யமுடியும். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு ஆறு மாத காலத்துக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும். வங்கியில் கடன் வாங்கியிருக்கும் விவசாயிகள், மாத ஊதியதாரர்கள் என அனைவருக்கும் மாத தவணை செலுத்துவதிலிருந்து ஆறு மாத காலத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்